வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: சோலையார் அணை நீர்மட்டம் உயர்வு, அக்காமலை தடுப்பணை நிரம்பி வழிகிறது
வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், சோலையார் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அக்காமலை தடுப்பணை நிரம்பி வழிகிறது.
வால்பாறை,
வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 10-ந் தேதி கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து வால்பாறை பகுதி முழுவதும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை பெய்யத்தொடங்கிய மழை இடைவிடாமல் நேற்று விடிய, விடிய பெய்தது. இதனால் வால்பாறை பகுதியில் உள்ள பல்வேறு ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக அக்காமலை, கருமலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக கருமலை இரைச்சல் பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிவருகிறது. இந்த தண்ணீர் முழுவதும் வால்பாறை நகர் பகுதிக்கு குடிதண்ணீர் வழங்கும் அக்காமலை தடுப்பு அணைக்கு வருவதால் அக்காமலை தடுப்பு அணை நிரம்பி வழிகிறது.
அக்காமலை தடுப்பு அணையை தூர்வார நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பணிகள் பாதிப்படைந்துள்ளன. பருவமழை பெய்து வரும் நிலையில், சில வேளைகளில் வெயில் அடிக்கிறது. இதனால் தேயிலைத் தோட்டங்களில் கொழுந்து தேயிலை இலைகள் துளிர்விட்டு வளரத்தொடங்கி உள்ளன. இதனால் பச்சைத் தேயிலை உற்பத்தி அதிகரித்து வருகிறது. மேலும் பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தின் முக்கிய அணையாக இருக்கும் சோலையார்அணைக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையார்அணையின் நீர்மட்டம் வெறும் 2 அடிதான் இருந்தது. தற்போது பெய்து கொண்டிருக்கும் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆறுகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் தற்போது சோலையார்அணையின் நீர் மட்டம் 14.39 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 27 மி.மீ. மழையும், சோலையார்அணையில் 36 மி.மீ.மழையும், மேல்நீராரில் 36 மி.மீ.மழையும், கீழ்நீராரில் 29 மி.மீ.மழையும் பெய்துள்ளது. வால்பாறை பகுதியில் பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Tags :
Next Story