இலவச கண் சிகிச்சை முகாம்


இலவச கண் சிகிச்சை முகாம்
x
தினத்தந்தி 24 Jun 2019 3:24 AM IST (Updated: 24 Jun 2019 3:24 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் போன்றவை இணைந்து நேற்று கண் சிகிச்சை முகாமை நடத்தியது.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்க மாளிகை, அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் போன்றவை இணைந்து நேற்று கண் சிகிச்சை முகாமை நடத்தியது. முகாமை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்துகொண்டனர். அவர்களில் 109 பேருக்கு கண்புரை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பூந்தமல்லி நூம்பல் பகுதியில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த முகாமில் தி சென்னை சில்க்ஸ் குடும்ப நிர்வாக இயக்குனர் கே.விநாயகம், இயக்குனர் பி.எம்.சபரி ஏகாம்பரம், திருவள்ளூர் மாவட்ட சுகாதார சேவைகள் இணை இயக்குனர் டாக்டர் பி.வி.தயாளன், திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் சேகர், திருவள்ளூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க மருத்துவர் டாக்டர் பிரியா மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் அரவிந்த் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Next Story