சென்னிமலை அருகே 29-ந் தேதி விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண செயல்திட்ட அறிவிப்பு கூட்டம்; அ.கணேசமூர்த்தி எம்.பி. பேட்டி
விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண செயல்திட்ட அறிவிப்பு கூட்டம் சென்னிமலை அருகே வருகிற 29-ந் தேதி நடத்தப்பட உள்ளதாக அ.கணேசமூர்த்தி எம்.பி. கூறினார்.
ஈரோடு,
ஈரோட்டில் அ.கணேசமூர்த்தி எம்.பி. நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொங்கு மண்டலத்தில் உயர் மின்கோபுரம் அமைத்தல், கெயில் எரிவாயு குழாய் பதித்தல், பாரத் பெட்ரோலியத்தின் எண்ணெய் குழாய் பதித்தல், 8 வழிச்சாலை அமைத்தல் போன்ற திட்டங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். விவசாயிகள் தங்களது பிரச்சினைகளை தீர்க்க தனித்தனியாக போராடி வருகிறார்கள். இதற்காக விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்களுடைய பிரச்சினைக்கு தீர்வு காண செயல்திட்ட அறிவிப்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு உழவர்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே காங்கேயம் ரோட்டில் உள்ள பசுவப்பட்டி பிரிவில் வருகிற 29-ந் தேதி காலை 9.30 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் ஈரோடு எம்.பி. என்ற முறையில் நானும், எம்.பி.க்கள் பி.ஆர்.நடராஜன் (கோவை), கே.சுப்பராயன் (திருப்பூர்), ஆ.ராசா (நீலகிரி), எஸ்.ஜோதிமணி (கரூர்), ஏ.கே.பி.சின்ராஜ் (நாமக்கல்), எஸ்.ஆர்.பார்த்திபன் (சேலம்), கே.சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி) ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். இதில் உயர் மின்கோபுரங்கள், எண்ணெய் குழாய் பதித்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், அத்திக்கடவு-அவினாசி, பாண்டியாறு-புன்னம்புழா போன்ற பாசன திட்டங்களை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையிலும் செயல்திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.
உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதால் விவசாயிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. இந்த திட்டத்தை நிறைவேற்ற அரசு முயற்சி செய்து வருகிறது. மின்சாரத்தை கொண்டு செல்லும் பயன்பாட்டை விட பாதிப்பு அதிகமாக உள்ளது. உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதால் பாதிப்பு ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்து இருக்கிறது. அதையும் மீறி இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது. அதற்கு மாற்று வழியாக கேபிள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story