ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினையை உடனே தீர்க்க வேண்டும்; கலெக்டரிடம், நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தல்


ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினையை உடனே தீர்க்க வேண்டும்; கலெக்டரிடம், நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 Jun 2019 4:00 AM IST (Updated: 24 Jun 2019 3:50 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினையை உடனே தீர்க்க வேண்டும் என்று கலெக்டரிடம் நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தினார்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கிராமங்களில் தண்ணீர் கிடைக்காமல் நீண்ட தூரம் அலைந்து திரிந்து பொதுமக்கள் இரு சக்கர வாகனம், வண்டிகளில் தண்ணீரை சேகரித்து வரும் அவலம் தொடர்கிறது.

சனவெளி,கே.ஆர்.மங்கலம், குளத்தூர், மண்டபம் யூனியன், ராமநாதபுரம் நகர், திருவாடானை, சாயல்குடி, பரமக்குடி உள்பட மாவட்டம் முழுவதும் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட கலெக்டர் வீரராகவராவை ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ்கனி நேரில் சந்தித்து மனு கொடுத்தார். அப்போது ேபார்க்கால அடிப்படையில் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும் உவர்் நீரை நன்னீராக்கும் நிலையம் அமைக்கவேண்டும். கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி பொதுமக்களுக்கு போதிய அளவு தண்ணீர் வழங்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி மழைகாலங்களில் முழுமையாக தண்ணீரை சேகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் பழுதை உடனுக்குடன் சீர்செய்து குடிநீர் வீணாகாமல் தடுக்கவேண்டும். மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் ஆங்காங்கே ஆழ்குழாய் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கவும் கலெக்டரிடம் எம்.பி. கேட்டுக்கொண்டார். அப்போது எம்.பி.யுடன் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநில பொருளாளர் ஷாஜகான், காங்கிரஸ் மூத்த பிரமுகர் சாயல்குடி வேலுச்சாமி, எம்.பி. நேர்முக உதவியாளர் தோனி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story