புனேயில் கொடூரம் கணவரை கொன்று உடலை கால்வாயில் வீசிய மனைவி கள்ளக்காதலனுடன் கைதானார்


புனேயில் கொடூரம் கணவரை கொன்று உடலை கால்வாயில் வீசிய மனைவி கள்ளக்காதலனுடன் கைதானார்
x
தினத்தந்தி 24 Jun 2019 4:00 AM IST (Updated: 24 Jun 2019 3:51 AM IST)
t-max-icont-min-icon

புனேயில் கணவரை கொன்று உடலை கால்வாயில் வீசிய பெண் கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

புனே,

புனேயில் கணவரை கொன்று உடலை கால்வாயில் வீசிய பெண் கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

காவலாளி கொலை

புனே புர்சுங்கி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது45). காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சரிதா (34). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள்.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பிரகாஷ் அங்குள்ள ஒரு கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டார். போலீஸ் விசாரணையில், அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

பிரகாஷ் கொலை தொடர்பாக போலீசார் சரிதாவிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

கள்ளக்காதலனுடன் உல்லாசம்

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தான் தனது கள்ளக்காதலன் தார்கேஷ் (25) என்ற வாலிபருடன் சேர்ந்து கணவரை தீர்த்து கட்டிய அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சரிதாவை கைது செய்தனர். விசாரணையில் கீழ்க்கண்ட தகவல்கள் தெரியவந்தன.

சரிதா கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் தார்கேசை வீட்டுக்கு அழைப்பார். அவரும் அங்கு வந்து சரிதாவுடன் உல்லாசமாக இருந்துவிட்டு செல்வார். இவ்வாறு அடிக்கடி நடந்து வந்துள்ளது.

கைது

இந்தநிலையில், ஒருநாள் இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சரிதாவை கண்டித்தார். இது சரிதாவுக்கு கோபத்தை உண்டாக்கியது. இதனால் அவர் எப்படியாவது கணவரை கொலை செய்து விட வேண்டும் என திட்டம் போட்டார்.

அதன்படி சம்பவத்தன்று கள்ளக்காதலன் தார்கேசை வீட்டுக்கு வரவழைத்தார். பின்னர் இருவரும் சேர்ந்து பிரகாசை அடித்து கொலை செய்தனர். பின்னர் உடலை கால்வாயில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது கள்ளக்காதலன் தார்கேசையும் கைது செய்தனர்.

Next Story