சிறு, குறுந்தொழில் கடன் திட்டத்துக்கு ரூ.2,907 கோடி கடன் வழங்க இலக்கு; கலெக்டர் தகவல்


சிறு, குறுந்தொழில் கடன் திட்டத்துக்கு ரூ.2,907 கோடி கடன் வழங்க இலக்கு; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 24 Jun 2019 4:19 AM IST (Updated: 24 Jun 2019 4:19 AM IST)
t-max-icont-min-icon

சிறு,குறு கடன் திட்டங்களுக்கு ரூ.2,907 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர்,

கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான வங்கி மேலாளர்கள் கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் 2019-20-ம் ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்ட அறிக்கையினை கலெக்டர் சிவஞானம், வெளியிட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தூத்துக்குடி மண்டல மேலாளர் விஸ்வநாதன் பெற்றுக்கொண்டார்.கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

நபார்டு வங்கி மற்றும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி விருதுநகர் மாவட்டத்திற்கு 2019-20-ம் ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் மொத்த முன்னுரிமைக் கடன்களுக்கான இலக்கு ரூ.6,837 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த திட்டங்களுக்கான இலக்கு ரூ.2815 கோடி என்ற அளவிலும், சிறு மற்றும் குறு தொழில் சார் கடன் திட்டங்களுக்கான இலக்கு சுமார் ரூ.2,907 கோடி என்ற அளவிலும், கல்விக்கடன் சார்ந்த திட்டங்களுக்கான இலக்கு சுமார் ரூ.124 கோடி என்ற அளவிலும், வீட்டுக்கடன் சார்ந்த திட்டங்களுக்கான இலக்கு ரூ.21 0 கோடி 85 லட்சம் என்ற அளவிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஏற்றுமதிக்கடன் சார்ந்த திட்டங்களுக்கான இலக்கு ரூ.179 கோடி என்ற அளவிலும், சமூக அடிப்படை கட்டமைப்புக்கடன் சார்ந்த திட்டங்களுக்கான இலக்கு ரூ.48 கோடியே 85 லட்சம் என்ற அளவிலும், புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி கடன் சார்ந்த திட்டங்களுக்கான இலக்கு ரூ.50 கோடியே 40 லட்சம் என்ற அளவிலும், பிற முன்னுரிமைக் கடன் திட்டங்களுக்கான இலக்கு சுமார் ரூ.502 கோடி என்ற அளவிலும் கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கடன் திட்ட இலக்கானது சென்ற ஆண்டு கடன் திட்டத்தை விட சுமார் 5 சதவீதம் கூடுதலாக தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.கூட்டத்தில் ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் சுரேஷ்குமார் வேணு, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் ராஜா சுரேஷ்வரன் உள்பட அனைத்து வங்கி மேலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story