விமான நிறுவனத்தில் பைலட் பணி
பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியாவில் பைலட் மற்றும் கோ-பைலட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மொத்தம் 132 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களாகும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-6-2019-ந் தேதியில் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க ேவண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். பிளஸ்-2 படித்து, பைலட் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கான நேரடி நேர்காணலில் பங்கேற்கலாம். புதுடெல்லியில் உள்ள சப்தர்ஜங் விமான தளத்தில் வரும் ஜூலை 3-ந் தேதி இதற்கான நேர்காணல் நடக்கிறது. இது பற்றிய விரிவான விவரங்களை http://www.airindia.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story