காரைக்கால் மாவட்டத்தில் 27 கிராம பஞ்சாயத்துகளில் குளம் தூர்வாரும் பணி


காரைக்கால் மாவட்டத்தில் 27 கிராம பஞ்சாயத்துகளில் குளம் தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 25 Jun 2019 3:30 AM IST (Updated: 25 Jun 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

காரைக்கால் மாவட்டத்தில் 27 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குளங்கள் தூர்வாரும் பணி நடைபெற்றது.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை சமாளிக்கவும், வரும் பருவமழையின்போது மழைநீரை சேகரிக்கவும் குளங்களை தூர்வாரி, மரக்கன்றுகள் நட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்பேரில் நிரவி-திருபட்டினம் தொகுதியில் நடைபெற்ற குளம் தூர்வாரும் பகுதியை கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்து, மரக்கன்று நட்டார். இந்நிகழ்ச்சியில் திருபட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ராமகிருஷ்ணன், நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

காரைக்கால், நெடுங்காடு, கோட்டுச்சேரி உள்ளிட்ட கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்து பகுதிகளும், மகளிர் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர், கொம்யூன் பஞ்சாயத்தோடு இணைந்து, நெடுங்காடு பெரியகுளம், நல்லாத்தூர் கோயிலடி குளம், புத்தக்குடி வடகத்தி குளம், வடமட்டம் திருவேங்கடபுரம் வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில், நெடுங்காடு கொம்யூன் ஆணையர் காளிதாஸ் தலைமையில் தூர்வாரும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், துணை கலெக்டர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 9 கிராம பஞ்சாயத்துகளில் பஞ்சாயத்து ஆணையர் ராஜேந்திரன் மேற்பார்வையில் குளங்கள் தூர்வாரும் பணி நடந்தது. காரைக்கால் மாவட்டம் முழுவதும் 27 கிராம பஞ்சாயத்துகளில் குளம் தூர்வாரும் பணி நடைபெற்றது.

Next Story