திருமானூர் அருகே மகா காளியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் தரிசனம்


திருமானூர் அருகே மகா காளியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 25 Jun 2019 4:00 AM IST (Updated: 25 Jun 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

திருமானூர் அருகே புதுக்கோட்டை மகா காளியம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுக்கோட்டை கிராமத்தில் மகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடந்த திருவிழாவினை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை பக்தர்கள் கொள்ளிடம் ஆற்றங்கரையில் இருந்து பால்குடங்களை தலையில் சுமந்து முக்கிய வீதிகளின் வழியாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து மகா காளியம்மனுக்கு பக்தர்கள் கொண்டு வந்த பால் மற்றும் பன்னீர், இளநீர், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பக்தர்கள் சாமி தரிசனம்

இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரவு மகா காளியம்மன் அலங்கரிக்கப்பட்டிருந்த சிறிய தேரில் எழுந்தருள செய்யப்பட்டது. இதையடுத்து தேரினை பக்தர்கள் இழுத்து சென்றனர். முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் அதன் நிலையை வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Next Story