சிவகாசி– வெம்பக்கோட்டை ரோட்டில் அரசுக்கு சொந்தமான மரங்கள் வெட்டிக்கடத்தல்?
மடத்துப்பட்டியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்த மரத்தை மர்ம மனிதர்கள் வெட்டி சென்றனர்.
சிவகாசி,
சிவகாசியில் இருந்து வெம்பக்கோட்டை செல்லும் சாலையில் போர்நாயக்கன்பட்டி கிராமம் உள்ளது. அந்த பகுதியில் உள்ள நீர்வரத்து பாதையில் மரங்கள் வளர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அரசுக்கு சொந்தமான இடத்தில் வளர்க்கப்பட்ட மரங்களை மர்ம ஆசாமிகள் இரவு நேரத்தில் வெட்டிக் கடத்தியதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்டிக் கடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் அந்தபகுதியில் உள்ள நீர்வரத்து பாதையில் வளர்ந்து நிற்கும் மரங்களை இனிவரும் காலங்களில் சமூக விரோதிகள் வெட்டாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story