மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் 27-ந் தேதி ராகுல்காந்தி ஆலோசனை பா.ஜனதா, சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கூட்டு கூட்டம் நடந்தது
மராட்டிய சட்டசபை தேர்தல் தொடர்பாக மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி வருகிற 27-ந் தேதி (நாளை மறுநாள்) ஆலோசனை நடத்துகிறார். பா.ஜனதா- சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கூட்டு கூட்டம் தேவேந்திர பட்னாவிஸ், உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்தது.
மும்பை,
மராட்டிய சட்டசபையின் பதவி காலம் அக்டோபரில் நிறைவு பெறுகிறது.
இந்தநிலையில் 288 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு வருகிற செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளன.
காங்கிரசின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்களை அடையாளம் காணும் முயற்சியாக அனைத்து தொகுதி பொறுப்பாளர்களையும் அழைத்து அந்த கட்சி தலைவர் சரத்பவார் ஆலோசனை நடத்தினார்.
இந்தநிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பா.ஜனதா, சிவசேனா கூட்டணி, சட்டசபை தேர்தலிலும் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. நேற்று இரு கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டு கூட்டம் சட்டசபை கட்டிடத்தில் நடந்தது. இதில், இரு கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
வரும் சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் ஒன்றாக போட்டியிடுவதை இது உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது.
இந்த கூட்டம் குறித்து நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் நிருபர்களிடம் கூறுகையில், “நாங்கள் வரும் சட்டமன்ற தேர்தலை இணைந்து சந்திக்க தயாராகி வருகிறோம். கூட்டணி பேச்சுவார்த்தையும் சில தினங்களில் தொடங்கிவிடும். எங்களின் கூட்டணி இந்த முறை 220-க்கும் அதிகமான இடத்தை கைப்பற்றும்” என்றார்.
இதேபோல் சிவசேனா மந்திரி தீபக் கேசர்கர் கூறுகையில், “இந்த கூட்டம் மேல்-சபை துணை தலைவராக நீலம் கோரே ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடவே ஏற்பாடு செய்யப்பட்டது” என்றார்.
அடுத்த முதல்-மந்திரி யார் என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அப்படிப்பட்ட விவாதங்கள் ஊடகங்களில் மட்டுமே நடக்கின்றன. கட்சிகளுக்கு இடையே இல்லை” என்றார்.
இதேபோல் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசும் சட்டசபை தேர்தலை சந்திக்க தீவிரம் காட்டி வருகிறது. சட்டமன்ற தேர்தல் குறித்து மராட்டிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுடன் வரும் ஜூன் 27-ந் தேதி (நாளை மறுநாள்) கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த தகவலை மராட்டிய காங்கிரஸ் பொறுப்பாளரான மல்லிகார்ஜூன கார்கே தங்களுக்கு அனுப்பியதாக எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் பாலாசாகேப் தொரட் உள்பட மாநில நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து நடைபெறும் சட்டசபை தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு அக்னி பரீட்சையாக அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story