ஒப்பந்த காலங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் பணப்பலன்களை வழங்க வேண்டும்; கோவை மண்டல மாநாட்டில் தீர்மானம்


ஒப்பந்த காலங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் பணப்பலன்களை வழங்க வேண்டும்; கோவை மண்டல மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 25 Jun 2019 10:45 PM GMT (Updated: 25 Jun 2019 7:33 PM GMT)

ஒப்பந்த காலங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் பணப்பலன்களை விரைவாக வழங்கக்கோரி போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் கோவை மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் கோவை மண்டல 5-வது மாநாடு திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மண்டல தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கருப்புசாமி வரவேற்று பேசினார். வரவேற்பு குழுவை சேர்ந்த துரைசாமி மாநாட்டை தொடங்கிவைத்து பேசினார்.

மாநில தலைவர் கிருஷ்ணன், பொதுச்செயலாளர் கர்சன் மற்றும் மண்டல பொருளாளர் கிருஷ்ணராஜ், பொதுச்செயலாளர் செல்வராசன், துணை பொதுச்செயலாளர் சேதுராமன், மாநில துணை பொதுச்செயலாளர் தேவராஜ் உள்பட பலர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்த மாநாட்டில் ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பலர் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் அரசே பென்சன் திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும். இதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். டி.ஏ.119 சதவீதத்தில் இருந்து 154 சதவீதமாக உயர்த்தியும், 2015-ம் ஆண்டு நவம்பர் முதல் நிலுவைதொகையை வழங்க வேண்டும். ஒப்பந்த உயர்வுகளின் படி பென்சனை உயர்த்தி வழங்க வேண்டும். சி.எஸ்.ஆர். பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும். ஒப்பந்த காலங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் பணப்பலன்களை விரைவாக வழங்க வேண்டும்.

பணிக்கொடை வழங்கும் சட்டத்தை மீறும் கழக நிர்வாகத்தை கண்டிப்பது. 2018 ஏப்ரல் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வு கால பணப்பயன்களை விரைவாக வழங்க வேண்டும்.

புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவ படியை உயர்த்த வேண்டும். குடும்ப ஓய்வூதியருக்கு மருத்துவப்படி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story