அவினாசி அருகே புலி தாக்கி இறந்த வீரர்களின் நினைவு நடுகற்கள் கண்டெடுப்பு
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே புலி தாக்கி இறந்த வீரர்களின் நினைவு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன.
திருப்பூர்,
கொங்கு மண்டலம் நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்ட நிலப்பகுதியாகும். இன்றும் நமது மண் குறிஞ்சியும், முல்லையும் சார்ந்த நிலப்பரப்பாகத்தான் காட்சியளிக்கிறது. சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதிய கற்காலத்தின் இறுதியில் ஒரு இடத்தில் நிலையாக தங்கிய மக்கள் கூட்டமாக வாழத்தொடங்கினார்கள். ஒவ்வொரு கூட்டமும் ஒவ்வொரு இனக்குழுவாக வாழ்ந்து கால்நடை வளர்ப்பிலும், வேளாண்மையிலும் ஈடுபட்டு வந்தது.
கால்நடைகளை காத்து வளர்த்தல், விளைந்த தானியத்தை எருமைகளையும், மாடுகளையும் கொண்டு போர் அடித்து சேமித்தல், ஆறு, குளம், குட்டை மற்றும் ஏரி நீர்பாசனத்தை மேம்படுத்துதல் போன்ற பணிகளை முல்லை நிலத்து மக்கள் அன்றாட தொழில்களாக செய்து வந்தனர் என்பதை நாம் நமது சங்க இலக்கியங்கள் மூலம் அறிய முடிகிறது.
இந்த நிலையில் பண்டைய ஆறை நாட்டில் இருந்த அவினாசியில் இருந்து நடுவச்சேரி செல்லும் சாலையில் சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ள “பெரிய ஒட்டபாளையத்தில்” திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த பொறியாளர் சு.ரவிக்குமார், க.பொன்னுச்சாமி மற்றும் ரா.செந்தில்குமார் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு கால்நடைகளை மேய்க்கும் போது புலி தாக்கி இறந்த வீரர்களுக்கான 2 நினைவு நடுகற்கள் இருந்ததை கண்டறிந்தனர்.
இது பற்றி ஆய்வு மைய இயக்குனர் பொறியாளர் சு.ரவிக்குமார் கூறியதாவது:-
கொங்கு மலைப்பகுதிகளிலும், சமவெளி பகுதிகளிலும் கால்நடை வளர்ப்பு தொழில் இன்று வரை ஊரக மக்களின் வாழ்வில் பொருள் ஈட்டும் நடவடிக்கையாக விளங்கி வருகிறது. கால்நடை வளர்ப்பிலும் மாட்டின் மீதும் இம்மக்கள் வைத்திருக்கும் ஈடுபாடு அளவிடக்கரியது. கொங்கு மண்டலத்தின் மண் சிறுசிறு ஓடைகல் கலந்த பூமியாக விளங்குவதால் இயற்கையிலேயே ஈரப்பசையை பாதுகாத்து வைக்கும் தன்மை மிகுந்ததாக விளங்குகிறது.
எனவே கால்நடைக்குரிய தீவனமான புல் இங்கு இயற்கையிலேயே நன்கு வளர்கின்றது. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த நிலை இங்கு நீடித்து நிலைத்து இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். இங்கு நமக்கு கிடைத்துள்ள முதல் நடுகல் 100 செ.மீ உயரமும், 50 செ.மீ அகலமும் உடையதாகும். 2-வது நடுகல் 90 செ.மீ உயரமும், 50 செ.மீ அகலமும் கொண்டதாகும். இந்த 2 நடுகற்களிலும் வீரனின் அள்ளிமுடிந்த குடுமி இடதுபுறம் சாய்ந்துள்ளது. வளர்ந்து தொங்கும் காதில் உள்ள குண்டலம் வீரனின் தோள்களைத் தொட்டவாறு உள்ளது. வீரர்கள் தங்கள் கழுத்தில் கண்டிகை, சரப்பளி வகை அணிகலன்களும் தோள் மீது தோள் மாலையும், முழங்கையில் கடகவளையும், மணிக்கட்டில் வீரகாப்பும் கால்களில் வீரக்கழலும் அணிந்து அழகு ஓவியமாக காட்சியளிக்கின்றனர். இந்த 2 வீரர்களுமே இடையில் மட்டும் ஆடை அணிந்து தங்களை இடதுபுறம் தாக்கும் புலியை வணங்கும்படி இந்த நடுகற்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த நடுகற்களின் தனிச்சிறப்பு பற்றி கூறும் போது, இதுவரை கொங்கு மண்டலத்தில் கிடைத்துள்ள பெரும்பாலான நடுகற்களில் வீரர்கள் தங்கள் கையிலுள்ள குறுவாள் அல்லது ஈட்டி மூலம் புலியைத் தாக்கும் வண்ணம் தான் கண்டறியப்பட்டன. ஆனால் இந்த 2 நடுகற்களிலும் ஆயுதங்கள் இல்லாமல் வீரர்களின் வலதுபுறம் “கவைக்கோல்“ காட்டப்பட்டுள்ளது. சங்க காலம் முதல் இன்று வரை இந்தக் கவைக்கோல் மூலம் தான் கால்நடைகளை மேய்க்கும் போது அவற்றின் உணவுக்காகக் காட்டிலுள்ள செடிகளையும், கொடிகளையும் வெட்டுவதற்காக கையில் கவைக்கோலுடன் மேய்ப்பவர்கள் செல்வதை நாம் பார்க்க முடிகிறது.
இதன் மூலம் பண்டைய தமிழ் சமூகத்தில் கால்நடை மேய்க்கும் போது தங்கள் இன்னுயிரை ஈத்த மேய்ப்பவர்களுக்கும் நடுகற்கள் எடுக்கும் வழக்கம் இருந்துள்ளதை நாம் அறிய முடிகிறது. கொங்கு மண்டல மக்களின் வாழ்வியலை எடுத்து கூறுகின்றன. இந்த நடுகற்களில் எழுத்துப் பொறிப்புகள் இல்லை. சிலை அமைப்பை வைத்து பார்க்கும்போது இவை சுமார் 400 ஆண்டுகள் பழமையானவை ஆகும் என்பது தெரிகிறது.
இவ்வாறு இயக்குனர் சு.ரவிக்குமார் கூறினார்.

Related Tags :
Next Story