பணியின் போது உயிரிழந்த போலீசாரின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை கலெக்டர் வழங்கினார்


பணியின் போது உயிரிழந்த போலீசாரின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 26 Jun 2019 4:15 AM IST (Updated: 26 Jun 2019 1:31 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் பணி புரிந்தபோது உயிரிழந்த போலீசாரின், வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வருவாய் துறையில் பணி நியமனம் செய்ய போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மூலம் கலெக்டருக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் பணி புரிந்தபோது உயிரிழந்த போலீசாரின், வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வருவாய் துறையில் பணி நியமனம் செய்ய போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மூலம் கலெக்டருக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து பணியின் போது இறந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயபால், மகன் ராஜிக்கும், பணியின் போது உயிரிழந்த போலீஸ் ஏட்டு அன்பழகனின், மனைவி புஷ்பலதாவுக்கும், இதேபோல் பணியின் போது உயிரிழந்த போலீஸ் ஏட்டு சிவசண்முகம், மகன் அருண்காந்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலுசாமி, மகன் பாலாஜி ஆகியோருக்கு கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலராக, கலெக்டர் விஜயலட்சுமி பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உடனிருந்தார்.

Next Story