தாதர் மார்க்கெட்டில் 10 ரூபாய்க்காக ஒருவர் குத்திக்கொலை காய்கறி வியாபாரி வெறிச்செயல்


தாதர் மார்க்கெட்டில் 10 ரூபாய்க்காக ஒருவர் குத்திக்கொலை காய்கறி வியாபாரி வெறிச்செயல்
x
தினத்தந்தி 26 Jun 2019 4:00 AM IST (Updated: 26 Jun 2019 2:15 AM IST)
t-max-icont-min-icon

தாதர் மார்க்கெட்டில் 10 ரூபாய்க்காக ஒருவரை குத்திக்கொலை செய்த காய்கறி வியாபாரியை போலீசார் தேடிவருகின்றனர்.

மும்பை,

மும்பை தாதர் ரெயில்நிலையத்தையொட்டி உள்ள மார்க்கெட்டில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் முகமது ஹனிப் என்பவர் காய்கறி வாங்கினார். இதற்காக அவர் கசங்கிய நிலையில் இருந்த 10 ரூபாய் நோட்டை வியாபாரியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த நோட்டை வாங்க வியாபாரி மறுத்தார்.

இது தொடர்பாக முகமது ஹனிப்புக்கும், காய்கறி வியாபாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த வியாபாரி அங்கு இருந்த கத்தியை எடுத்து முகமது ஹனிப்பின் கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார். பின்னர் அங்கு இருந்து தப்பிஓடினார்.

தகவல் அறிந்து சென்ற சிவாஜிபார்க் போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த முகமது ஹனிப்பை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பிஓடிய வியாபாரியை தேடிவருகின்றனர்.

10 ரூபாய்க்காக நடந்த இந்த கொலையால் தாதர் மார்க்கெட்டில் நேற்று முன்தினம் இரவு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story