குடிநீர் லாரிகளுக்கு சென்சார் கருவி திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும்; கணிப்பாய்வு அலுவலர் தர்மேந்திரபிரதாப் யாதவ் பேட்டி
மதுரையில் குடிநீர் லாரிகளுக்கு சென்சார் கருவி பொருத்தப்பட்டுள்ள திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கணிப்பாய்வு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் கூறினார்.
மதுரை,
மதுரை மாவட்டத்திற்கான கணிப்பாய்வு அலுவலரும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான தர்மேந்திரபிரதாப் யாதவ் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டார். அலங்காநல்லூர், வாடிப்பட்டி, சின்ன இலந்தைகுளம், கச்சைக்கட்டி, குமாரம் ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் மற்றும் அரசின் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின்போது உதவி இயக்குனர் (பஞ்சாயத்து) செல்லத்துரை உடனிருந்தார்.
அதன்பின் தர்மேந்திரபிரதாப் யாதவ், மதுரை மாநகராட்சி அரசரடி நீரேற்று நிலையம் மற்றும் மாநகராட்சி அண்ணா மாளிகையில் செயல்பட்டு வரும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி கமிஷனர் விசாகன் உடனிருந்தார்.
ஆய்வுக்கு பின்னர் தர்மேந்திரபிரதாப் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை மாநகராட்சி பகுதிகளை பொறுத்தமட்டில் குடிநீர் தங்கு தடையின்றி தற்போது வரை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவை உள்ளது. ஆனால் தற்போது 150 மில்லியன் லிட்டர் வரை தண்ணீர் கிடைக்கிறது. ஏற்கனவே குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட கசிவுகள் சரி செய்யப்பட்டு குடிநீர் வீணாவது தடுக்கப்பட்டுள்ளது.
மேலும் லாரிகள் மூலம் செய்யப்படும் குடிநீர் வினியோகம் சென்சார் மற்றும் ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணிக்கப்படுகிறது. இந்த திட்டம் மிக சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. எனவே இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்தால் எவ்வளவு தண்ணீர் எங்கே வினியோகம் செய்கிறார்கள் என்பதனை தெளிவாக கண்டறிய முடிகிறது. விதிமீறல்கள் தடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் குடிநீர் சேமிக்கப்படுவதுடன், மாநகராட்சி செலவினம் கட்டுபடுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story