வானவில் : சான்யோ ஸ்மார்ட் டி.வி.
ஜப்பானைச் சேர்ந்த சான்யோ நிறுவனம் மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம் அமேசானுடன் இணைந்து இரண்டு ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது.
சுலப தவணை வசதியோடு வந்துள்ள இந்த டி.வி.க்களின் விலை முறையே ரூ.13,000 மற்றும் ரூ.23,000 ஆகும்.
நெபுலா சீரிஸ் என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட் டி.வி.யில் யூ-டியூப், நெட் பிளிக்ஸ், ஆண்ட்ராய்டு மிரரிங், இன்பிளேன் ஸ்விட்சிங் (ஐ.பி.எஸ்.) டிஸ்பிளே தொழில்நுட்பம் ஆகியன உள்ளன. ஆண்ட்ராய்டு மிரரிங் வசதி உள்ளதால் தங்களது ஸ்மார்ட்போனில் உள்ள படங்களை பெரிய திரையில் பார்த்து ரசிக்க முடியும்.
நவீன தொழில்நுட்ப வசதிகளை அனைத்து பிரிவினரும் அனுபவிக்கும் வகையில் குறைந்த விலையில் அதிக வசதிகளைக் கொண்ட டி.வி.க்களை உருவாக்கியுள்ளதாக நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவுத் தலைவர் பங்கஞ் ராணா தெரிவித்துள்ளார். இன்றைய தலை முறையினரின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப வடிவமைக்கப் பட்டுள்ளது இந்த டி.வி.
Related Tags :
Next Story