வானவில் : வாட்ஸ் ஆப்பில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்கள்


வானவில் :  வாட்ஸ் ஆப்பில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்கள்
x
தினத்தந்தி 26 Jun 2019 1:39 PM IST (Updated: 26 Jun 2019 1:39 PM IST)
t-max-icont-min-icon

இன்றைய காலத்தில் வாட்ஸ் ஆப் செயலியை உபயோகிக்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவிற்கு அனைத்து தரப்பினரையும் சென்றடைந்திருக்கிறது வாட்ஸ் ஆப்.

ஆனால் இதை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது பலருக்கும் தெரிவதில்லை. குறிப்பாக, பெண்கள் தங்களை பற்றிய தகவல்களை மற்றவர் அறியாமல் எப்படி இந்த செயலியை உபயோகிக்கலாம் என சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

வாட்ஸ் ஆப்பில் இருக்கும் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று அங்கே பிரைவசி என்றிருக்கும் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். அங்கே நமது புரொபைல் போட்டோ, ஸ்டேட்டஸ், மற்றும் நமது பெயர் ஆகியவை யாருக்கு தெரிய வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளலாம். இதை செய்யாமல் போனால், வாட்ஸ் ஆப் குழுக்களில் இருக்கும் தெரியாத நபர்கள் கூட நமது புகைப்படத்தையும் பெயரையும் அறிந்து கொள்ள முடியும்.

குழுக்களில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியை, குழு நபர்கள் யார் படித்திருக்கின்றனர் என்பதை அனுப்பியவர் தெரிந்து கொள்ள முடியும். அப்படி பார்க்கும் போது நாம் பார்த்தது அவருக்கு தெரிய வேண்டாம் எனில் பிரைவசி பகுதியில் இருக்கும் ரீட் ரெசிப்ட்ஸ் ( READ RECEIPTS ) என்பதை ஆப் ( DISABLE ) செய்ய வேண்டும். இப்படி செய்வதால் நாம் அனுப்பிய தகவலை யார் படித்திருக்கின்றனர் என்பதையும் நம்மால் பார்க்க முடியாது.

அதனால் நாம் இழக்க போவது ஏதுமில்லை. இதை செய்யாமல் போனால் நம்மை பற்றிய தகவலை குழுவில் இருக்கும் அறிமுகமில்லாத நபர்கள் பார்த்து விட முடியும். எனவே கவனமாக நடந்து கொள்வது நல்லது.

Next Story