வானவில் : ரியல் மி சி2 ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன்களில் தரமான பிராண்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘ரியல்மி’ புதிதாக சி2 என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இதுவரையில் ஆன்லைன் மூலமே விற்பனை செய்து வந்த இந்நிறுவனம் முதல் முறையாக சில்லறை விற்பனையகங்கள் மூலமாக விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக 8 ஆயிரம் விற்பனையகங்களில் தொடர்பு கொண்டு புதிய மாடலை அறிமுகம் செய்து உள்ளது.
இதில் மூன்று வேரியன்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. முதல் மாடல் 2 ஜிபி ரேம், 16 ஜி.பி. நினைவகம் கொண்டது. மற்றொரு மாடல் 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவகம் கொண்டது. மற்றொன்று 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவகம் கொண்டது. இவற்றின் ஆரம்ப விலை ரூ.6,000 ஆகும்.
விற்பனைக்கு பிந்தைய சிறப்பான சேவையை அளிப்பதற்காக இந்நிறுவனம் 283 சேவை மையங்களை அமைத்துள்ளது. சி2 மாடல் 6.1 அங்குல தொடு திரையைக் கொண்டது. இதில் உள்ள கோர்னிங் கிளாஸ் படம் பார்க்கவும், விளையாடவும் ஏற்றது. நீண்ட நேரம் பேசுவதற்கு, நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு வசதியாக இதில் 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில் 2.0 கிகாஹெர்ட்ஸ், 12 என்.எம். ஆக்டா கோர், ஹீலியோ பி22 பிராசஸர் உள்ளது. இதில் 3 ஸ்லாட்டுகள் உள்ளதால் 2 சிம்களை பயன்படுத்த முடியும். அத்துடன் நினைவகத் திறனை எஸ்.டி. கார்டு போட்டு நீட்டித்துக் கொள்ளவும் முடியும். இதன் பின்பகுதியில் இரட்டை கேமரா உள்ளது. முதல் கேமரா 13 மெகா பிக்ஸெல்லைக் கொண்டது. அடுத்தது 2 மெகா பிக்ஸெல்லாகும். இதில் ஆண்ட்ராய்டு பை 9.0 இயங்குதளம் உள்ளது.
Related Tags :
Next Story