வானவில் : 48 மெகா பிக்ஸெல் கேமரா மோட்டோரோலா அறிமுகம்
ஸ்மார்ட்போன் உற்பத்தியில் பழம் பெரும் நிறுவனமான மோட்டோரோலா தற்போது 48 மெகா பிக்ஸெல் கேமராவைக் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
மோட்டோரோலா ஒன் விஷன் என்ற பெயரில் இது அறிமுகமாகியுள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. விரைவான சார்ஜிங்கிற்கு வசதியாக 15 வாட் பயன்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக இதில் 3,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. 6.3 அங்குல தொடு திரையைக் கொண்டதாக இது வந்துள்ளது. 4 ஜி.பி. மற்றும் 128 ஜி.பி. நினைவகம் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அழகிய கண்கவர் வண்ணங்களில் வெளிவந்துள்ள இந்த மாடல் ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,000 ஆகும். பிளிப்கார்ட் இணையதளம் மூலமாக மட்டுமே இதை விற்பனை செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது.
48 மெகா பிக்ஸெல்லைக் கொண்ட இதில் கேமராவுக்கு இணையான துல்லியமாக படங்களை எடுக்க முடியும். இதில் உள்ள இரண்டாவது கேமரா 5 மெகா பிக்ஸெல்லைக் கொண்டது. செல்பி பிரியர்களைக் கருத்தில் கொண்டு முன்புறம் உள்ள கேமரா 25 மெகா பிக்ஸெல்லைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பேஸ் அன்லாக் வசதி, விரல் ரேகை பதிவு வசதி ஆகியனவும் இதில் உள்ளன. மைக்ரோ எஸ்.டி. கார்டு வசதி உள்ளதால் இதன் நினைவகத்தை 512 ஜி.பி. வரை நீட்டிக்க முடியும். இதன் எடை 180 கிராம் மட்டுமே. கேமரா மீது நாட்டம் கொள்வோரின் மிகச் சிறந்த தேர்வாக இது நிச்சயம் இருக்கும்.
Related Tags :
Next Story