நகைக்கடை மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் உள்துறை மந்திரி அமித்ஷாவிடம், கர்நாடக பா.ஜனதா எம்.பி.க்கள் மனு


நகைக்கடை மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் உள்துறை மந்திரி அமித்ஷாவிடம், கர்நாடக பா.ஜனதா எம்.பி.க்கள் மனு
x
தினத்தந்தி 27 Jun 2019 4:10 AM IST (Updated: 27 Jun 2019 4:10 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு நகைக்கடை மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம், கர்நாடக பா.ஜனதா எம்.பி.க்கள் மனு கொடுத்தனர்.

பெங்களூரு,

பெங்களூருவை சேர்ந்த ஒரு நகைக்கடை நிறுவனம் அதிக வட்டி கொடுப்பதாக முதலீடுகளை பெற்று ரூ.1,640 கோடி மோசடி செய்துள்ளது. இதுகுறித்து கர்நாடக அரசு, சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது. அந்த குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷாவை கர்நாடக பா.ஜனதா எம்.பி.க்கள் நேற்று நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். பின்னர் பெங்களூரு நகைக்கடை மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெங்களூருவில் ஒரு நகைக்கடை நிறுவனம் பொதுமக்களிடம் முதலீடுகளை பெற்று ரூ.5,000 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது. அதேபோல் இன்னொரு நிறுவனமும் முதலீடுகளை பெற்று மோசடி செய்துள்ளது. இரு நிறுவனங்களின் உரிமையாளர்களும் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள். இந்த மோசடி குறித்து விசாரிக்க கர்நாடக அரசு, சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது.

கண்துடைப்பு நடவடிக்கை

இந்த குற்றச்சாட்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. குறிப்பாக நகைக் கடை நிறுவனத்தின் உரிமையாளர் மன்சூர்கான், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர்கள் பலருடன் புகைப்படம் எடுத்துள்ளார். அதனால் சிறப்பு விசாரணை குழு என்பது ஒரு கண்துடைப்பு நடவடிக்கை. இந்த விசாரணையால் உறுதியான நடவடிக்கையை எதிர்பார்க்க முடியாது. அதனால் இந்த மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story