கடையநல்லூர் அருகே, கருப்பாநதி அணையில் அம்மன் சிலை கண்டெடுப்பு


கடையநல்லூர் அருகே, கருப்பாநதி அணையில் அம்மன் சிலை கண்டெடுப்பு
x
தினத்தந்தி 27 Jun 2019 4:15 AM IST (Updated: 27 Jun 2019 6:05 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் அருகே கருப்பாநதி அணையில் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

கடையநல்லூர்,

கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி அணை கோடை வெயிலால் வறண்டது. இந்த நிலையில் பொதுப்பணித்துறை சார்பில் கடந்த சில நாட்களாக ஷட்டர்களை பழுது பார்க்கும் பணிகள் நடந்து வருகிறது.

அப்போது சிமெண்டு மூட்டைகளை வேலையாட்கள் அணையின் கரையில் இருந்து ஷட்டர் பகுதியில் போடும்போது சகதிக்குள் புதைந்து கிடந்த சிலை ஒன்றில் பட்டு சிமெண்டு மூட்டை உடைந்தது.

இதையடுத்து அணைக்குள் வேலையாட்கள் இறங்கி பார்த்தபோது, சகதிக்குள் சிலை ஒன்று சிறிதளவு வெளியில் தெரிந்தபடி இருந்தது. பின்னர் சகதியை தோண்டி பார்த்தபோது காளியம்மன் சிலை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிலையை மீட்டு சுத்தம் செய்து அணையின் அருகே பிரதிஷ்டை செய்தனர்.

மேலும் இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும், நெல்லையில் உள்ள தொல்லியல் துறை வல்லுனர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்த தகவல் பரவியதும் சொக்கம்பட்டி, கடையநல்லூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து சிலையை வணங்கி சென்றனர். 

Next Story