வண்டலூர் ஊராட்சியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி ஆர்ப்பாட்டம்
காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூர் ஊராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வண்டலூர்,
வண்டலூர் ஊராட்சி மக்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் வண்டலூர் மலையில் இருந்து பெரிய ஏரிக்கு செல்லும் வருவாய் கால்வாய்களை சீரமைத்து தூர்வாரி புனரமைக்க வேண்டும், வண்டலூரில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள 3 அரசு பொது கிணறுகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும், வண்டலூர் பெரிய ஏரியின் கீழ் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து லாரி மூலம் தண்ணீர் எடுத்து விற்பதை தடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை வண்டலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை) சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வண்டலூர் கிளைச் செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் இரணியப்பன், கோபால், ஓட்டேரி கிளை செயலாளர் பாலாஜி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் கொட்டும் மழையில் காலிக்குடங்களுடன் வண்டலூர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் புருஷோத்தமன், வி.ஆர்.கண்ணன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story