நரிக்குடி அருகே, விவசாயி கொலையில் தம்பி-மகன் போலீசில் சரண்


நரிக்குடி அருகே, விவசாயி கொலையில் தம்பி-மகன் போலீசில் சரண்
x
தினத்தந்தி 28 Jun 2019 4:00 AM IST (Updated: 28 Jun 2019 5:36 AM IST)
t-max-icont-min-icon

நரிக்குடி அருகே விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தம்பி மற்றும் தம்பி மகன் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

திருச்சுழி,

நரிக்குடி அருகே உள்ள குறவைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்சாமி (வயது 65). திருமணம் ஆகாதவர். இவர் கணக்கனேரி கண்மாய் பகுதியில் உடலில் ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

தகவல் அறிந்த நரிக்குடி போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் விவசாயி பால்சாமியை, அவரது தம்பி ஆறுமுகமும், அவரது மகன்களும் சொத்து பிரச்சினையால் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

இதனிடையே பால்சாமியின் தம்பி ஆறுமுகத்தின் மகன் ஆனந்தகுமார் ஏற்கனவே மதுரை மாவட்ட கோர்ட்டில் சரண் அடைந்தார். இந்த நிலையில் நேற்று பால்சாமியின் தம்பி ஆறுமுகம் (வயது 60), அவரது மற்றொரு மகன் மருது (36) ஆகிய இருவரும் நரிக்குடி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

Next Story