புதிய தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி, நகலை எரித்து அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம் - நன்னிலத்தில் நடந்தது


புதிய தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி, நகலை எரித்து அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம் - நன்னிலத்தில் நடந்தது
x
தினத்தந்தி 29 Jun 2019 4:30 AM IST (Updated: 28 Jun 2019 10:54 PM IST)
t-max-icont-min-icon

புதிய தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி நன்னிலத்தில் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நன்னிலம்,

மத்திய அரசு புதிய தேசிய கல்வி கொள்கையை அறிவித்துள்ளது. இதற்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எனவே புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும். மும்மொழி திட்டத்தை கைவிட வேண்டும்.

தமிழகத்திற்கு மாணவர்கள் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அதற்கு மத்திய அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் நகலை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று நன்னிலம் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து. புதிய தேசிய கல்வி கொள்கையின் நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க செயலாளர் தீபன்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஹரிசுர்ஜித் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ஆனந்த், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மதன்பாலா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பாரதி, கலைவாணன், ஆகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். அப்போது புதிய கல்வி கொள்கை நகலை தீயிட்டு எரித்து கோஷங்கள் எழுப்பினர். 

Next Story