பராமரிப்பு பணி: தாம்பரம்-கடற்கரை இடையே மின்சார ரெயில் சேவை ரத்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு


பராமரிப்பு பணி: தாம்பரம்-கடற்கரை இடையே மின்சார ரெயில் சேவை ரத்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Jun 2019 4:15 AM IST (Updated: 29 Jun 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம்-கடற்கரை இடையே மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இரவு 11.30 மணி, கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.05, 11.30, 11.59 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் இன்று(சனிக்கிழமை) மற்றும் நாளை(ஞாயிற்றுக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* செங்கல்பட்டு-கடற்கரை இடையே இரவு 10.15, 11.10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் இன்று(சனிக்கிழமை) மற்றும் நாளை(ஞாயிற்றுக்கிழமை) தாம்பரம்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story