புதுச்சேரியில் யோகா பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் பாரதீய ஜனதா வலியுறுத்தல்


புதுச்சேரியில் யோகா பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்  பாரதீய ஜனதா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 Jun 2019 3:45 AM IST (Updated: 29 Jun 2019 2:32 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் யோகா பாடத்தை கட்டாய மாக்கவேண்டும் என்று சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. விடு்த்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகம் முழுவதும் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. ஆனால் புதுவை மாநிலத்தில் யோகா தின விழாவை முதல்-அமைச்சர் உள்பட அனைத்து அமைச்சர்களும் புறக்கணித்துவிட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் திட்டத்தை கண்மூடித்தனமாக எதிர்ப்பதாக கருதி இதுபோல் நடந்துகொண்டவர்களை பாரதீய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாட்டில் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் யோகா வகுப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுவை அரசு தூங்கிக்கொண்டு இருக்கிறது.

புதுவை மாநிலத்திலும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் உடற்கல்வி வகுப்பின்போது யோகா பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பிக்கவேண்டும். காவல்துறையில் அனைவருக்கும் வாரம் ஒருமுறை யோகா வகுப்பு நடத்த வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடியின் 90 சதவீத நலத்திட்டங்களை நிறைவேற்றாமல் புதுவையில் ஒரு வேடம், டெல்லியில் ஒரு வேடம் போட்டு பிரதமரிடம் புதுவையில் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி பொய் வாக்குறுதி அளித்து வருகிறார். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story