குடியாத்தத்தில் அரசு அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
குடியாத்தத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 22 பவுன் நகை, ரூ.16 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
குடியாத்தம்,
குடியாத்தம் நெல்லூர்பேட்டை 2-வது நீலிகொல்லைத் தெருவை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 65). ஓய்வு பெற்ற வணிகவரித்துறை அதிகாரி. கடந்த வாரம் காசிநாதன் குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காசிநாதன் வீட்டின் அருகே உள்ளவர்கள் அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது குறித்து அவருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து காசிநாதன் நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் இருந்த 22 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ.16 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து காசிநாதன் கொடுத்த புகாரின்பேரில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் உள்ளிட்ட போலீசார் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story