கோவையில் கோர்ட்டு பணி நேர்காணலுக்கு குவிந்த பட்டதாரிகள் ஒத்திவைப்பு நோட்டீசை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பினர்
கோவையில், கோர்ட்டு பணிக்கான நேர்காணலுக்கு ஏராளமான பட்டதாரிகள் குவிந்தனர். ஒத்திவைக்கப்பட்ட நோட்டீசை பார்த்ததும் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
கோவை,
கோவை கோர்ட்டு அலுவலக உதவியாளர், இரவுக்காவலர், பணியாளர்களுக்கான நேர்காணல் கோவை கோர்ட்டில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. கோர்ட்டு அலுவலக உதவியாளர்கள் மற்றும் இரவுக்காவலர் பணி என்றாலும் ஏராளமான பட்டதாரிகள் இந்த வேலையாவது தங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்து இருந்தனர். இந்தநிலையில் கோர்ட்டு முன்புற கேட்டில் நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக நோட்டீசு ஒட்டப்பட்டு இருந்தது. இதனை பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் அவர்கள் திரும்பிச்சென்றனர்.
கோர்ட்டு ஊழியர்களும் நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கோர்ட்டு முன்பு நின்றவர்களிடம் தெரிவித்தனர். நேர்காணலுக்கு வந்தவர்கள் கூறும்போது, நாங்கள் வெளியூரில் இருந்து வந்துள்ளோம். எங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதற்கான விவரம் முன்கூட்டியே தெரியவில்லை என்று கூறினார்கள்.
இதுகுறித்து கோர்ட்டு நிர்வாக பிரிவு ஊழியர்கள் கூறும்போது, கோர்ட்டு பணியாளர்களுக்கான நேர்காணல் தேதி ஒத்திவைக்கப்பட்டு இருப்பது குறித்து இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.
வெளிமாவட்டங்களில் உள்ளவர்களுக்கு தெரிவிப்பதற்காக அந்தந்த மாவட்ட கோர்ட்டு நிர்வாக அலுவலகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது. மேலும் விவரங்கள் கோவை மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் http://dist-r-icts.ec-ourts.gov.in/co-i-m-b-at-o-re வெளியிடப்படும் என்று தெரிவித்தனர்.
ஏராளமானவர்கள் கோர்ட்டு முன்பு திரண்டு நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story