புதிய போலீஸ் சூப்பிரண்டாக அருண் பாலகோபாலன் பதவியேற்பு
தூத்துக்குடி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக அருண் பாலகோபாலன் பதவியேற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் முரளிரம்பா. இவர் கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றார். தொடர்ந்து பொதுமக்களிடையே அமைதியை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா சி.பி.ஐ.க்கு விருப்ப மாறுதல் கோரி இருந்தார். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா உள்பட 4 அதிகாரிகள் சி.பி.ஐ.க்கு பணிமாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டராக அருண் பாலகோபாலன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டராக அருண் பாலகோபாலன் நேற்று காலையில் பதியேற்றுக் கொண்டார். அவரை தூத்துக்குடி மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா மலர்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பின்னர் அருண் பாலகோபாலன் நிருபர்களுக்கு கூறுகையில், தூத்துக்குடியில் தற்போது உள்ள பிரச்சினைகள் குறித்து முழுமையாக அறிந்து கொண்ட பிறகு உரிய நடவடிக்கையை எடுப்பேன். போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்றார். அதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் பயிற்சி உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். தொடர்ந்து விருதுநகர், நாங்குநேரி மற்றும் சிறப்பு அதிரடிப்படையில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். அதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று, மதுரை போக்குவரத்து துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். அங்கு அவர் சுமார் 2 ஆண்டுகள் பணியில் இருந்தார். அதன் பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தின் 30-வது போலீஸ் சூப்பிரண்டாக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

Related Tags :
Next Story