இடைகால், முதலியார்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் கிராம சபை கூட்டம்


இடைகால், முதலியார்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 30 Jun 2019 3:15 AM IST (Updated: 29 Jun 2019 11:12 PM IST)
t-max-icont-min-icon

இடைகால், முதலியார்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் கிராமசபை கூட்டம் நடந்தது.

அச்சன்புதூர்,

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. கடையநல்லூர் அருகே உள்ள நயினாரகரம் பஞ்சாயத்து கிராம சபை கூட்டம் துரைச்சாமிபுரத்தில் நடைபெற்றது. ஊர் பெரியவர் செல்லத்துரை தலைமை தாங்கினார். கிராம ஊராட்சி அலுவலர் மாரியப்பன், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய பற்றாளர் சிக்கந்தர் பாவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இடைகாலில் நடந்த கூட்டத்துக்கு ஊர் பெரியவர் கணபதி தலைமை தாங்கினார். கிராம ஊராட்சி அலுவலர் முருகையா, கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய பற்றாளர் செல்வி, கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடையம் அருகே உள்ள முதலியார்பட்டியில் தூய்மை இந்தியா வட்டார ஒருங்கிணைப்பாளர் சங்கரலிங்கம் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி செயலாளர் கந்தசாமி வரவேற்றார். சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முதலியார்பட்டி பள்ளிக்கூடத்தை விரிவுபடுத்த வேண்டும், கழிவுநீர் ஓடைகள், தெருநல்லிகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிராம சமூக தணிக்கையாளர் அபிஷா, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஆண்டாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நடந்த சமூக தணிக்கை கிராம சபை கூட்டத்துக்கு அப்துல்காதர் தலைமை தாங்கினார். கடையநல்லூர் சரக வட்டார வள அலுவலர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தெற்கு கடையத்தில் நடந்த கூட்டத்துக்கு ஊராட்சி செயலாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் முருகன், ஊராட்சி ஒன்றிய பற்றாளர் பாலகிருஷ்ணன், கடையம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பழனிகுமார், மருத்துவம் சாரா மருந்து மேற்பார்வையாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கொடிக்குறிச்சி, வேலாயுதபுரம், காசிதர்மம், ஊர்மேலழகியான், பொய்கை, நெடுவயல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் கிராம சபை கூட்டம் நடந்தது.

Next Story