ஏரியூர் அருகே கிணற்றில் பெண் பிணம் தற்கொலையா? போலீசார் விசாரணை


ஏரியூர் அருகே கிணற்றில் பெண் பிணம் தற்கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 Jun 2019 4:45 AM IST (Updated: 29 Jun 2019 11:14 PM IST)
t-max-icont-min-icon

ஏரியூர் அருகே கிணற்றில் பெண் பிணம் மிதந்தது. அவர் தற்கொலை செய்தாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஏரியூர், 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள வத்தல்பட்டியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 60). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கந்தம்மாள் (55). இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

சிவலிங்கத்துக்கும், மனைவி கந்தம்மாளுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கணவருடன் கோபித்துக் கொண்டு கந்தம்மாள் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. நேற்று மாலை ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள தோட்டத்தில் விவசாய கிணற்றில் கந்தம்மாள் பிணம் மிதந்தது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஏரியூர் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். கந்தம்மாள் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story