சூளகிரி அருகே மூதாட்டி கொலை வழக்கில் கணவர் கைது


சூளகிரி அருகே மூதாட்டி கொலை வழக்கில் கணவர் கைது
x
தினத்தந்தி 30 Jun 2019 3:30 AM IST (Updated: 30 Jun 2019 12:11 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே மூதாட்டி கொலையில் கணவரை போலீசார் கைது செய்தனர்.

சூளகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கானலட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமையா(வயது82). இவரது மனைவி பில்லம்மா(80). கடந்த 26-ந் தேதி பில்லம்மா கொலை செய்யப்பட்டு வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். மேலும் அவரது கணவர் ராமையா வீட்டில் இருந்து மாயமாகி இருந்தார். இது தொடர்பாக சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் போலீசாரின் விசாரணையில் ராமையா தனது மனைவியை கொலை செய்து தப்பி ஓடியது தெரிய வந்தது. இதையடுத்து ராமையா, கர்நாடக மாநிலம் ஆனேக்கல் பகுதியில் பதுங்கி இருப்பதாக சூளகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு விரைந்து சென்று ராமையாவை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

கைதான ராமையா போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- எனது மனைவி பில்லம்மா கூலி வேலைக்கு சென்று வந்தார். நான் அவரிடம் அடிக்கடி பணம் கேட்டேன். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று தகராறு நடந்ததால் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளால் பில்லம்மாவை வெட்டினேன். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து நான் ஆனேக்கல் தப்பியோடி விட்ேடன். என்னை போலீசார் கைது செய்தனர் என்று அவர் கூறினார். இதைத் தொடர்ந்து ராமையாவை போலீசார் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

Next Story