3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 361 போலீசார் இடமாற்றம்
தஞ்சை மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 361 போலீசாரை இடமாற்றம் செய்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு, போக்குவரத்து புலன் விசாரணை பிரிவு என மொத்தம் 53 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இது தவிர கட்டுப்பாட்டு அறை, துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகியவையும் உள்ளன. இந்த அலுவலகங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் போலீசார் இடமாறுதல் செய்யப்படுவது வழக்கம். அதன்படி தற்போது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீஸ்காரர், போலீஸ் ஏட்டு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 361 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
இவர்கள் அனைவரையும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாறுதல் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.

Related Tags :
Next Story