தண்ணீர் வசதி செய்து தராத நகராட்சியை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


தண்ணீர் வசதி செய்து தராத நகராட்சியை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 30 Jun 2019 4:30 AM IST (Updated: 30 Jun 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் வசதி செய்து தராத நகராட்சியை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில் அன்றாடம் சேரும் குப்பைகளை சேகரிக்கும் பணியில் நிரந்தரப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என 150-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பணியாளர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அன்றாடம் காலை 5 மணி முதல் தங்களது பணிகளை தொடங்கி 21 வார்டுகளிலும் உள்ள குப்பைகளை சேகரிக்கும் பணிகளை முடித்துவிட்டு அண்ணாசிலை அருகில் உள்ள நகராட்சிக்கு உட்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அடிப்பகுதியில் உள்ள குழாயில் கை, கால் மற்றும் முகங்களை கழுவி சுத்தம் செய்துவிட்டு பின்னர் வீட்டிற்கு செல்வது வழக்கம். ஆனால் கடந்த ஒருவார காலமாக நகராட்சி அலுவலர்கள் அந்த குழாயின் வால்வினை மூடிவிட்டனர். இதனால் துப்புரவு பணியாளர்கள் வேலை முடிந்து வந்து பார்த்தபோது குழாயில் தண்ணீர் வராதவாறு மூடி இருந்ததால் நகராட்சி ஆணையரிடம் முறையிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இதை ஆணையர் மற்றும் அதிகாரிகள் இதுநாள் வரை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று கூறப்படு கிறது. இதனால் ஆத்திரமடைந்த துப்புரவு பணியாளர்கள் தங்களுக்கு தண்ணீர் வசதி செய்து தரவேண்டும் என கோரிக்கை வைத்து நேற்று காலை முதல் பணிக்கு செல்லாமல் புறக்கணித்தும் மேலும் பணியாளர்களுக்கு மாதந்தோரும் சரியாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஒப்பந்த பணியாளர்களுக்கான வைப்பு நிதி மற்றும் பிடித்தங்கள் பற்றிய விபரத்தினை தெரிவிக்கவும், நிரந்தரப் பணியாளர்களின் வைப்பு நிதிக்கான வட்டி தொகையை முறைப்படுத்தி தரவும், அனைத்து பணியாளர்களுக்கும் 6 மாதத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story