தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 1,449 பேருக்கு பணி நியமன ஆணை கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்


தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 1,449 பேருக்கு பணி நியமன ஆணை கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்
x
தினத்தந்தி 30 Jun 2019 4:00 AM IST (Updated: 30 Jun 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் ஆகியவற்றின் சார்பில் அரியலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய (ஐ.டி.ஐ.) வளாகத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் ஆகியவற்றின் சார்பில் அரியலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய (ஐ.டி.ஐ.) வளாகத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமினை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்து, பல்வேறு தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்களின் சார்பில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் அரங்குகளை பார்வையிட்டனர். இதில் 70-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற முகாமில், வேலை கேட்டு 4,368 பேர் வந்திருந்தனர். அவர்களில் 13 மாற்றுத்திறனாளிகள் உள்பட 1,449 பேருக்கு பணி நியமன ஆணைகளை தனியார் நிறுவனங்கள் சார்பில் கலெக்டர் விஜயலட்சுமி, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் வழங்கினர். முகாமில் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி எகசானலி, அரியலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் நாகராஜ், மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் சண்முகராஜன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர், (மகளிர் திட்டம்) லலிதா மற்றும் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story