கோழி வாங்க வந்ததுபோல் நடித்து மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
கடவூர் அருகே கோழி வாங்க வந்ததுபோல் நடித்து, மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர்,
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சின்னாம்பட்டியை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 49). இவர், அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர், தனது தாய் பெரியக்காள் (75), மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் பெரியக்காள் வீட்டின் வெளியே பாத்திரம் கழுவி கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், பெரியக் காளை அழைத்து தாங்கள் கோழி வியாபாரம் செய்து வருவதாகவும், தங்களது வீட்டில் கோழிகள் ஏதும் வளர்க்கிறீர்களா? அதனை நாங்கள் விலைக்கு வாங்கி கொள்கிறோம் என கூறி பேச்சு கொடுத்தனர். அப்போது நாங்கள் கோழி ஏதும் வளர்க்கவில்லை. பக்கத்து தெருவிற்கு சென்று கேட்டு பாருங்கள் என பெரியக்காள் கூறினார். அப்போது திடீரென அந்த நபர்கள் பெரியக்காளின் கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை பறித்தனர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். சத்தம் கேட்டதும் வீட்டிலிருந்தவர்கள் ஓடி வந்து அந்த நபர்களை பிடிக்க முற்பட்டபோது, சங்கிலியுடன் அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர். கோழி வாங்க வந்தது போல் நடித்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் குறித்து பாலவிடுதி போலீஸ் நிலையத்தில் வீரப்பன் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் சங்கிலி பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story