கடலூர் முதுநகர் அருகே பரவனாற்று ரெயில்வே பாலத்தில் வாலிபர் பிணம் போலீசார் விசாரணை
கடலூர் முதுநகர் அருகே பரவனாற்று ரெயில்வே பாலத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் முதுநகர்,
கடலூர் முதுநகர் அருகே உள்ள பரவனாற்று ரெயில்வே பாலத்தில் 25 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதை அந்தவழியாக சென்றவர்கள் பார்த்து, ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சிதம்பரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தனிப்பிரிவு ஏட்டு பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. அவர் நீல நிற சட்டையும், கருநீல நிறத்தினால் ஆன பேண்டும் அணிந்துள்ளார்.
இதையடுத்து வாலிபர் உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமாக என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story