கீழக்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


கீழக்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 30 Jun 2019 4:15 AM IST (Updated: 30 Jun 2019 2:11 AM IST)
t-max-icont-min-icon

கீழக்கரையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

கீழக்கரை,

கீழக்கரை நகர் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நகர் பகுதியாகும். இங்கு பெரும்பாலான தெருக்கள் குறுகலாகவும், வாகன போக்குவரத்து நிறைந்ததாகவும் உள்ளது. இதனால் கீழக்கரை நகரில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதுகுறித்து பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து முதல் கட்டமாக முஸ்லிம் பஜார், கிழக்கு தெரு உள்ளிட்ட நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதில் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி தலைமையில் துப்புரவு ஆய்வாளர் பூபதி, நகர் திட்ட ஆய்வாளர் பார்த்தசாரதி, தமிழ்ச்செல்வன், சரவணன், இளநிலை உதவியாளர் கார்த்திகேயன், மேற்பார்வையாளர் மனோகரன், சக்தி, மற்றும் நகராட்சி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

ஏற்பாடுகள்

இதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை கீழக்கரை இன்ஸ்பெக்டர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீராம், மற்றும் போலீசார் செய்திருந்தனர். இதேபோல வள்ளல் சீதக்காதி சாலை மற்றும் இந்து பஜார் ஆகிய இடங்களில் ஒரு வாரத்திற்குள் அனைத்து வீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

Next Story