சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வரும் குற்றவாளிகளை அடையாளம் காண அதிநவீன தொழில்நுட்பம் ரெயில்வே சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்


சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வரும் குற்றவாளிகளை அடையாளம் காண அதிநவீன தொழில்நுட்பம் ரெயில்வே சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 30 Jun 2019 5:05 AM IST (Updated: 30 Jun 2019 5:05 AM IST)
t-max-icont-min-icon

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வரும் பழைய குற்றவாளிகளை கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் காணும் அதிநவீன ‘எட்ஜ் பாஸ்ட்’ தொழில்நுட்பத்தை சென்னை ரெயில்வே சூப்பிரண்டு ரோகித் நாதன் ராஜகோபால் நேற்று தொடங்கிவைத்தார்.

சென்னை,

ரெயில்வே சூப்பிரண்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்டிரல் ரெயில் நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் கணினியில், மாநில குற்ற ஆவண காப்பகத்தில் உள்ள பழைய குற்றவாளிகள் குறித்த ஆவணங்களை அவர்களது புகைப்படத்துடன் உள்ளடு செய்துள்ளோம். இதன் மூலம் ரெயில் நிலையத்துக்கு வரும் பழைய குற்றவாளிகளை கண்காணிப்பு கேமரா மூலம் இந்த கணினி அடையாளம் காட்டும்.

இந்த தொழில்நுட்பம் தமிழகத்தில் முதல் முறையாக எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு குற்றச்சம்பவங்களை தடுக்க முடியும். மேலும் இந்த கணினியில் தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் உள்ள ஆவணங்களையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். கூடிய விரைவில் இந்த தொழில்நுட்பம் சென்னையில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சென்டிரல் ரெயில்வே துணை சூப்பிரண்டு முருகன், இன்ஸ்பெக்டர்கள் தாமஸ் ஜேசுதாசன் உடனிருந்தனர்.

Next Story