வருமான வரித்துறை அதிகாரி நந்தினி வரைந்த ஓவியங்கள் கண்காட்சி
சென்னை ராயப்பேட்டையில் வருமான வரித்துறை அதிகாரி நந்தினி வரைந்த ஓவியங்கள் கண்காட்சி நடந்தது.
சென்னை,
சென்னை ராயப்பேட்டை அமேதிஸ்ட் கபேயில், வருமான வரித்துறை துணை கமிஷனர் நந்தினி நாயர் வரைந்த ஓவியங்கள் ‘சின்ன சின்ன உரையாடல்கள்-கேட்க வேண்டிய குரல்கள்’ என்ற தலைப்பில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியை பிரபல ஓவியர் பார்வதி நாயர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் நந்தினி நாயருக்கு பள்ளி பருவத்தில் அவரது ஓவியத் திறமையை வெளிக்கொண்டு வந்த ஓவிய ஆசிரியர் எம்.பி.மனோஜை, பார்வதி நாயர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். இந்த கண்காட்சியில் பெண்களை தனித்துவ அடையாளங்களோடு சித்தரிக்கும் விதமாக வரையப்பட்ட 50 ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதில் சில ஓவியங்கள், ஒரே நாள் இரவில் வரைந்து முடிக்கப்பட்டதாக நந்தினி நாயர் தெரிவித்தார்.
இந்த ஓவிய கண்காட்சி இன்று(ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறும். பல்வேறு அளவுகளில், வண்ண மயமாக இருந்த ஓவியங்களை கல்லூரி மாணவர்கள், கலை ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் ஆர்வத்துடன் பார்வையிட் டனர்.
Related Tags :
Next Story