பொன்னேரியில் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


பொன்னேரியில் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 30 Jun 2019 5:23 AM IST (Updated: 30 Jun 2019 5:23 AM IST)
t-max-icont-min-icon

பொன்னேரியில் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொன்னேரி,

பொன்னேரியில் துணை மின் நிலையம் உள்ளது. இங்கு இருந்து தடப்பெரும்பாக்கம், வேம்பாக்கம், திருவாயர்பாடி உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சார வினியோகம் செய்யப்படுகிறது. இங்கு அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. இது குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு தெரிவிக்க பொதுமக்கள் முயன்றனர். ஆனால் முடியவில்லை.

மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திருவொற்றியூர்-பொன்னேரி நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து அவர்கள் மறியலை கை விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story