சேலம் அம்மாபேட்டையில் வீடுகளில் சுவர் ஏறி குதிக்கும் ‘டவுசர்’ கொள்ளையன் பொதுமக்கள் பீதி
சேலம் அம்மாபேட்ைடயில் வீடுகளில் சுவர் ஏறி குதிக்கும் ‘டவுசர்’ கொள்ளையனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
சேலம்,
சேலம் மாநகர் பகுதிகளில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க ஏதுவாக பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், நகை பறிப்பு, வீடு புகுந்து திருடுதல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் சிலர் ஈடுபட்டு போலீசாருக்கு சவால் விடுத்து வருகின்றனர்.
இ்ந்தநிலையில், சேலம் அம்மாபேட்டை பெரியகிணறு தெரு குடியிருப்பு பகுதியில் மர்ம நபர் ஒருவர், வீட்டின் மீது ஏறி பின்னர் அங்கிருந்து குதித்து தப்பி செல்லும் பரபரப்பான காட்சி, அங்குள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது.
அதில், குறுகிய வீதி ஒன்றில் எந்தவித அச்சமும் இல்லாமல் நுழையும் அந்த நபர், ஒவ்வொரு வீடாக கதவை திறக்க முயன்று, பின்னர், மாடி வீட்டின் மீது ஏறுவதும், சுமார் 10 நிமிடங்கள் கழித்து அந்த வீட்டிலிருந்து குதித்து அங்கிருந்து தப்பி ெசல்லும் காட்சி பதிவாகி உள்ளது. அவர் ‘டவுசர்’ மட்டுமே அணிந்திருப்பதால் ‘டவுசர்’ கொள்ளையன் என்று பொதுமக்கள் அழைக் கிறார்கள்.
அதாவது, திருடும்போது யாரிடமும் சிக்கினால் அவர்களிடம் இருந்து எளிதில் தப்பிச்செல்ல ஏதுவாக தனது கைகள் மற்றும் உடல் முழுவதும் கிரீஸ் தடவி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. திருட்டு சம்பவத்தில் ஈடுபடும்போது தன்னை யாராவது பிடித்துவிட்டால் அவர்களது கை நழுவி எளிதாக தப்பி விடலாம் என டவுசரும், கிரீசும் பயன்படுத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி அறிந்த அப்பகுதி பொதுமக்கள், அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அங்கு தெருமுனையில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவிலும், காவல்துறை சார்பில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவிலும் பதிவான அந்த மர்ம ஆசாமியின் உருவம் குறித்த காட்சிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்த மர்ம ஆசாமி, ‘டவுசர்’ மட்டுமே அணிந்திருப்பதால் ஒருவேளை அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம்? என்றும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. குடியிருப்பு பகுதிகளில் ‘டவுசர்’ கொள்ளையன் வீடுகளில் சுவர் ஏறி குதித்த தகவல் அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பரவியதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story