திருச்செந்தூர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை


திருச்செந்தூர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 1 July 2019 3:30 AM IST (Updated: 30 Jun 2019 11:12 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

திருச்செந்தூர், 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுயம்புலிங்கம் (வயது 67) ஓட்டல் தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக சரியாக வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் சுயம்புலிங்கம் உயிர் இழந்தார்.

திருச்செந்தூர் அடுத்துள்ள பரமன்குறிச்சி அருகே உள்ள முருகேசபுரத்தை சேர்ந்த மந்திரகுமார் (65) என்பவர் வாழை இலைகள் விற்பனை செய்து வந்தார். இவருடைய 2-வது மனைவி ஆரோக்கியமேரி (45). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் மந்திரகுமார் தனது வீட்டுக்கு அருகே உள்ள ஒரு தோட்டத்தில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு அங்கு உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த 2 சம்பவங்கள் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story