திருச்சியில் கிளி மூக்கு, விசிறிவால் சேவல் கண்காட்சி சிறந்த சேவலுக்கு மோட்டார் சைக்கிள் பரிசு
திருச்சியில் கிளி மூக்கு, விசிறிவால் சேவல் கண்காட்சி நடைபெற்றது. சிறந்த சேவலுக்கு மோட்டார் சைக்கிள் பரிசு வழங்கப்பட்டது.
திருச்சி,
திருச்சி பிராட்டியூரில் நேற்று கிளி மூக்கு, விசிறிவால் சேவல் வளர்ப்போர் சங்கம் சார்பில் சேவல் கண்காட்சி நடந்தது. இதில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கரூர், திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 200 சேவல்கள் கலந்து கொண்டன. கிளி மூக்கு போன்ற சேவல்களின் தலை, அலகு, கண்கள், மற்றும் அவற்றின் வால், இறக்கை பகுதிகளில் உள்ள முடிகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் நடுவர் குழுவினரால் சிறந்த சேவல்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.
மோட்டார் சைக்கிள் பரிசு
இதில் அதிக மதிப்பெண் பெற்ற சிறந்த சேவலுக்கு சிறப்பு பரிசாக மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது. இந்த பரிசினை அதன் உரிமையாளர் பெற்றுக்கொண்டார். இது தவிர முதல் பரிசாக 6 கிராம் தங்க நாணயம், 2-ம் பரிசாக 4 கிராம் தங்க நாணயம், 3-ம் பரிசாக 2 கிராம் தங்க நாணயம், 27 சேவல்களுக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயம், மற்றும் 10 சேவல்களுக்கு கைகெடிகாரம் பரிசாக வழங்கப்பட்டது.
கால்களில் கத்தி கட்டி விட்டு சேவல்கள் ஒன்றுடன் போர்க்குணத்துடன் மோதும் சேவல் சண்டை நடத்தப்பட்ட காலம் மாறி தற்போது சேவல்களுக்கு அவற்றின் அழகின் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சியில் சேவல் வளர்ப்போர் மட்டும் இன்றி பார்வையாளர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story