கும்பகோணத்தில் புதிதாக 20 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
கும்பகோணத்தில் புதிதாக 20 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கும்பகோணம்,
கும்பகோணத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்கள் ஏராளமாக உள்ளன. இந்த கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் நாள்தோறும் கும்பகோணத்துக்கு வந்து செல்கிறார்கள். கும்பகோணம் நகரம் ஆன்மிக சுற்றுலா பயணிகளால் எப்போதும் நிரம்பி இருக்கும்.
பஸ் நிலையம், கோவில் வீதிகள் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளை கண்காணிக்க வசதியாக போலீஸ்துறை சார்பில் கும்பகோணம் பகுதியில் 266 கண்காணிப்பு கேமராக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை பார்வையிட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வசதியாக கும்பகோணம் நால்ரோடு அருகே உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 4 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அண்ணாசாலை
இந்த நிலையில் மகாமகம் குளம் அண்ணா சாலையில் இருந்து பெண்கள் கல்லூரி வரை உள்ள பகுதியில் குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து அண்ணா சாலை பகுதியில் புதிதாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் நடவடிக்கை மேற்கொண்டார்.
அதன்படி அண்ணாசாலை பகுதியில் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் 20 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு வியாபாரிகள் சங்கத்தினரும் நிதி உதவி அளித்துள்ளனர். இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை 24 மணி நேரமும் பார்வையிடுவதற்காக கிழக்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story