தண்ணீர் பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை கோரி அறப்போர் இயக்கம் ஆர்ப்பாட்டம்


தண்ணீர் பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை கோரி அறப்போர் இயக்கம் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 July 2019 4:30 AM IST (Updated: 1 July 2019 3:10 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தும் வகையில் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை,

ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தலைமை தாங்கி பேசுகையில், ‘தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை தலை விரித்து ஆடுகிறது. உரிய நடவடிக்கை எடுக்க அரசு மெத்தனம் காட்டுகிறது. நீர்நிலைகளை தூர்வாரி, நீர் சுழற்சியை மேம்படுத்தி இருந்தாலே இந்நேரம் தண்ணீர் பிரச்சினையில் இருந்து தப்பித்திருக்கலாம். இனி இதுபோல ஒரு பிரச்சினை ஏற்படாமல் இருக்க நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு இருக்கவே கூடாது. விரிவான நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்தும் சட்டம் இயற்றப்பட வேண்டும். மக்கள் பாதிப்பில் இருந்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முறையாக மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இதில் அறப்போர் நீர்நிலைகள் மீட்பு பொறுப்பாளர் ஹாரிஸ் சுல்தான், சட்ட பஞ்சாயத்து இயக்க நிர்வாகி செந்தில் ஆறுமுகம், பாடகி சின்மயி, சமூக ஆர்வலர்கள் பியூஷ் மனுஷ், காளஸ்வரன், வக்கீல் ஆறுமுகம், நித்யானந்த் ஜெயராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story