போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து பேசினார்.
ஊத்துக்கோட்டை,
போதைப்பொருட்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஊத்துக்கோட்டையில் நடைபெற்றது. இதை முன்னிட்டு ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து பேசினார்.
அப்போது அவர், ‘மது மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையானவர்களிடமும், அவர்களின் குடும்பத்தாரிடமும் பேசி பாதிக்கப்பட்டவர்களை அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள மனநல பிரிவுக்கு அழைத்துச் சென்று குடி மற்றும் போதை பழக்கத்துக்கு அடிமையான நிலைகளில் இருந்து விடுபட சிகிச்சை எடுத்துக்கொள்ள ஆலோசனை கூற வேண்டும். இளம் தலைமுறையினரிடம் மது மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார்.

Related Tags :
Next Story