என்ஜினீயரிங் நிறுவனத்தில் வேலை


என்ஜினீயரிங் நிறுவனத்தில் வேலை
x
தினத்தந்தி 1 July 2019 3:36 PM IST (Updated: 1 July 2019 3:36 PM IST)
t-max-icont-min-icon

பொதுத்துறை என்ஜினீயரிங் நிறுவனமான ‘என்ஜினீயர்ஸ் இந்தியா’ நிறுவனத்தின் கீழ் செயல்படும் துணை நிறுவனம் ‘சர்டிபிகேசன் என்ஜினீயர்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் (CEIL)’

சர்டிபிகேசன் என்ஜினீயர்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் இன்ஸ்பெக்சன் என்ஜினீயர் மற்றும் சேப்டி என்ஜினீயர் போன்ற பணிகளுக்கு என்ஜினீயர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 167 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு பணிக்குமான காலியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

இண்டஸ்ட்ரியல் சேப்டி டிப்ளமோ என்ஜினீயரிங் அல்லது என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் சேப்டி என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதர என்ஜினீயரிங் பிரிவில் படித்து இந்த பாடப்பிரிவில் டிப்ளமோ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இன்ஸ்பெக்சன் என்ஜினீயரிங் பணிகளுக்கு சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் அல்லது டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிக்கு ஏற்ற அனுபவம் தேவை.

விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்ப படிவத்தை நிரப்பி, தேவையான சான்றுகளுடன் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். சென்னையில் ஜூலை 5-ந் தேதியும், மும்பையில் ஜூலை 8-ந் தேதியும் நேர்காணல் நடக்கிறது. ஜூலை 18 வரை பல்வேறு இடங்களில் நேர்காணல் நடக்க உள்ளது. விரிவான விவரங்களை http://ceil.co.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு நேர்காணலில் பங்கேற்கலாம்.

Next Story