எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் வேலை
எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் (AIIMS) என்று அழைக்கப்படுகிறது. தற்போது பாட்னாவில் செயல்படும் எய்ம்ஸ் கிளையில் பேராசிரியர், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், கூடுதல் பேராசிரியர் போன்ற பணியிடங்களுக்கு 196 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பேராசிரியர் பணிக்கு 46 இடங்களும், உதவி பேராசிரியர் பணிக்கு 56 இடங்களும், இணை பேராசிரியர் பணிக்கு 56 இடங்களும், கூடுதல் பேராசிரியர் பணிக்கு 38 இடங்களும் உள்ளன.
உதவி பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் பணிக்கு 50 வயதுக்கு உட்பட்டவர்களும், பேராசிரியர் மற்றும் கூடுதல் பேராசிரியர் பணிக்கு 58 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். முதுநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.1500-ம், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் ரூ.1200 கட்டணம் செலுத்தினால் போதுமானது. மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த வேண்டாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசிநாள் 10-7-2019-ந் தேதியாகும்.
62 பணிகள்
மற்றொரு அறிவிப்பின்படி பாட்னா எய்ம்ஸ் கிளையில் பேராசிரியர், உதவி பேராசிரியர், கூடுதல் பேராசிரியர் பணிகளுக்கு 62 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அனட்டாமி, பிசியாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, பார்மகாலஜி, மைக்ரோபயாலஜி போன்ற முதுநிலை மருத்துவம் மற்றும் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு ஜூலை 14-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
அலுவலக பணியிடங்கள்
இன்னொரு அறிவிப்பின்படி கற்பித்தல் சாராத ஜூனியர் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்டன்ட் பணிக்கு 11 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 12-ம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு ஜூலை 30-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
மற்றொரு அறிவிப்பின்படி கற்பித்தல் சாராத பணியிடங்களான ‘ஸ்டோர் கீப்பர் கம் கிளார்க்’ பணிக்கு 85 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக கட்டணம் செலுத்தி ஜூலை 30-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
இவை பற்றிய விவரங்களை www.aiimspatna.org என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
Related Tags :
Next Story